

ஹுத்ஹுத் புயல் கரையைக் கடந்தாலும் புயலின் தாக்கம் 6 மணி நேரத்துக்கு நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஹுத்ஹுத் புயல் ஞாயிற்றுக்கிழமை காலை விசாகப்பட்டினத்தில் கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 170 முதல் 180 கி.மீ வரை காற்று பலமாக வீசியது.
புயல் கரையைக் கடந்தாலும் புயலின் தாக்கம் 6 மணி நேரத்துக்கு நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தலைவர் தெரிவித்துள்ளார்.
மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுவது 6 மணி நேரத்திற்கு தொடரும். கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, விசாகப்பட்டினம், விஜியநகரம், ஸ்ரீகாகுளம் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று வீசும், கன மழையும் பெய்யும் என எச்சரித்துள்ளார்.
வடமேற்கு திசை நோக்கி நகர்ந்துவரும் ஹுத்ஹுத் சற்று வலுவிழந்த நிலையில் ஒடிஸாவை அடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.