

அடுத்த நிதி ஆண்டின் நிதிப்பற்றாக்குறை ஜிடிபியில் 3.2 சதவீதமாக கட்டுப்படுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார். முன்னதாக அடுத்த நிதி ஆண்டின் நிதிப்பற்றாக்குறை 3 சதவீதமாக இருக்கும் என முன்னதாக நிர்ணயம் செய்யபட்டிருந்ததது.
முன்னாள் வருவாய் துறை செயலாளர் என்.கே.சிங் தலைமை யிலான குழு ஒன்று அமைக்கப் பட்டிருந்தது. நிர்ணயம் செய் யப்பட்ட இலக்கில் இருந்து 0.50 சதவீதம் வரையில் மாற்றம் இருக்கலாம் என விலக்கு அளித் திருந்தது. அதனால் தவிர்க்க முடியாத காரணத்தால் 0.2 சதவீதம் நிதிப்பற்றாக்குறை நிர்ணயம் செய்யப்பட்டதைவிட கூடுதலாக இருக்கும். அடுத்தடுத்த நிதி ஆண்டுகளில் நிதிப்பற்றாக்குறை 3 சதவீதத்துக்குள் கட்டுப்படுத் தப்படும்.
நடப்பு நிதி ஆண்டில் வருவாய் பற்றாக்குறை 2.3 சதவீதமாக இருக்கும். அடுத்த நிதி ஆண்டில் வருவாய் பற்றாக்குறை 2.1 சதவீதமாக இருக்கும் என்று கூறினார்.