ஜிஎஸ்டி வரியால் சேவை நிறுவனங்களுக்கு புதிய சிக்கல்: துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து

ஜிஎஸ்டி வரியால் சேவை நிறுவனங்களுக்கு புதிய சிக்கல்: துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து
Updated on
1 min read

மத்திய அரசு ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்த உள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பால் சேவைத்துறை நிறு வனங்கள் புதிய பிரச்சினையை எதிர்கொள்ள உள்ளன.

இதில் முக்கிய பிரச்சினை என்னவென்றால், ஜிஎஸ்டி நெட்வொர்க் இன்னமும் புதிய புதிவுகளுக்கான பணியைத் தொடங்கவில்லை. இது சேவைத் துறையினரை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கு முன்பு இந்த நெட்வொர்க் ஏப்ரல் மாதத்தில் ஒரு மாதம் இயங்கியது. தற்போதைய வரித்திட்டத்தில் இருந்து புதிய ஜிஎஸ்டிக்கு மாறும் கோரிக்கை களை மட்டுமே இந்த நெட்வொர்க் ஏற்று வருகிறது.

பதிவு எண்

நடப்பு வரி முறைகளின்படி இந்தியாவில் பல மாநிலங்களில் அலுவலகங்களை வைத்திருக் கும் சேவைத்துறை நிறுவனங்கள் ஒரே ஒரு பதிவு எண் வைத்திருந்தால் போதுமானது. ஆனால் புதிய ஜிஎஸ்டி வரி திட்டத்தின்படி தங்களது வர்த்தக நடவடிக்கை உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் பதிவு எண் பெற வேண்டியது அவசியமாகிறது.

இந்தப் பிரச்சினை குறித்து பிஎம்ஆர் அண்ட் அசோசியேட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மகேஷ் ஜெய்சிங் கூறும்போது, “அனைத்து சேவைத்துறை நிறுவனங்களும் மீண்டும் பதிவு எண் பெற வேண்டிய சிக்கலான நடைமுறையை மீண்டும் ஒரு முறை கடைபிடிக்க வேண்டி யுள்ளது. அதாவது கிளை நிறுவனங்களைப் பல்வேறு மாநிலங்களில் வைத்திருக்கும் சேவை நிறுவனங்கள் மீண்டும் பதிவு எண் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது ஜிஎஸ்டி நெட்வொர்க் புதிய பதிவுகளை ஏற்பதில்லை. தற்போது பழைய வரி முறையிலிருந்து ஜிஎஸ்டிக்கு மாறுவதற்கான நடைமுறை களை மட்டுமே செயல்படுத்தி வருகிறது. எனவே தொழில் நுட்பம், விளம்பரம், ஆலோசனை, லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட சேவைத் துறை நிறுவனங்கள் மாநில ஜிஎஸ்டி அடையாள எண்ணைப் பெற வேண்டிய நிலையில் உள்ளன. ஆனால் இதற்கு இன்னும் 15 நாட்களே உள்ளன” என்றார்.

இதனையடுத்து இத்தகைய பதிவு எண்ணைப் பெற நெருக்கடி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வரி நிபுணர் ஒருவர் ‘தி இந்து’விடம் (ஆங்கிலம்) கூறும்போது, “இப்போதைக்கு வாட் மற்றும் சேவை வரி உள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே பதிவு கள் செய்யப்பட்டு வருகின்றன. எனவே வாட் வரி செலுத்தும் நிறுவனங்கள் புதிய ஜிஎஸ்டிக்கு மாறும் நடைமுறை மேற்கொள்ளப் பட்டு வருகிறது” என்றார்.

பல மாநிலங்களில் இயங்கி வரும் மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அந்தந்த மாநிலங் களுக்கான பதிவு எண்ணைப் பெற வேண்டியுள்ளது.

ஆனாலும் சில நிபுணர்கள் கூறும்போது, சேவைத் துறை நிறுவனங்கள் ஒவ்வொரு மாநிலத் திலும் புதிய பதிவு எண்களைப் பெறுவது பெரிய சிக்கலை ஏற்படுத்தாது என்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in