இந்தியா, ஆப்கன் மீது தாக்குதல் நடத்த ஆண்டுக்கு 360 தீவிரவாதிகளுக்கு பயிற்சி: என்ஐஏ.விடம் தீவிரவாதி பகதூர் அலி திடுக்கிடும் தகவல்

இந்தியா, ஆப்கன் மீது தாக்குதல் நடத்த ஆண்டுக்கு 360 தீவிரவாதிகளுக்கு பயிற்சி: என்ஐஏ.விடம் தீவிரவாதி பகதூர் அலி திடுக்கிடும் தகவல்
Updated on
1 min read

‘‘இந்தியா, ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்த ஆண்டுக்கு 360 தீவிரவாதிகளுக்கு லஷ்கர் இ தொய்பா பயிற்சி அளித்து வருகிறது’’ என்று பிடிபட்ட லஷ்கர் தீவிரவாதி பகதூர் அலி திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி பகதூர் அலியை, கடந்த ஜூலை 25-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவரிடம் தேசிய புலனாய்வு கழக (என்ஐஏ) அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அதிகாரிகளிடம் பல திடுக்கிடும் தகவல்களை பகதூர் அலி கூறியுள்ளார். இதுகுறித்து அலி கூறியதாக என்ஐஏ மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது:

பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள ஜியா பாகா கிராமத்தைச் சேர்ந்தவர் பகதூர் அலி (21). இவருடைய தந்தை போலீஸ் கான்ஸ்டபிள்.

இந்தியா, ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதற்காக, பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் முகாம்களில் மாதத்துக்கு 25 முதல் 30 பேர் வரை தீவிரவாத பயிற்சிப் பெறுவதை பார்த்ததாக அலி கூறியுள்ளார். அந்தக் கணக்குப்படி பார்த்தால் ஆண்டுக்கு 360 பேருக்கு லஷ்கர் அமைப்பு தீவிரவாத பயிற்சி அளிக்கிறது. லஷ்கர் முகாமில் 3 கட்டங்களாக பகதூர் அலி தீவிரவாத பயிற்சி பெற்றுள்ளார்.

தீவிரவாத பயிற்சி பெறு பவர்கள் படிக்காதவர்கள். ஆனால், நவீன ஆயுதங்களை எளிதாக கையாளும் திறமைப் படைத்தவர்கள் என்று அலி கூறியுள்ளார்.

இவ்வாறு என்ஐஏ மூத்த அதிகாரி கூறினார்.

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு, பகதூர் அலிக்கு 23 ஆயிரம் இந்திய ரூபாயைக் கொடுத்துள்ளது. அதில் கள்ளநோட்டுகளும் கணிசமாக இருந்துள்ளன. மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு அமெரிக்க சிறையில் உள்ள டேவிட் ஹெட்லி, மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மும்பை நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.

அப்போது, தன்னிடம் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பினர் இந்திய ரூபாயின் கள்ளநோட்டுகளைக் கொடுத்து அனுப்பியதாக கூறியுள்ளார்.

மேலும், பகதூர் அலி இந்தியாவுக்குள் ஊடுருவும் போது, மேலும் 2 தீவிரவாதிகள் வந்துள்ளனர். அவர்கள் காஷ் மீரில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர் களிடமும் கள்ளநோட்டுகள் இருந் தன என்று என்ஐஏ அதிகாரிகள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in