தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு வாக்கு எண்ணுவதற்கான ஏற்பாடுகளை முடிக்க உத்தரவு

தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு வாக்கு எண்ணுவதற்கான ஏற்பாடுகளை முடிக்க உத்தரவு
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தலில் பதி வான வாக்குகளை எண்ணு வதற்கான ஏற்பாடுகளை நாளைக் குள் முடிக்குமாறு தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவா, பஞ்சாப், உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் ஏற்கெனவே முடிந்து விட்டது. உத்தரப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் வரும் 8-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து வரும் 11-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 157 மையங்களில் எண்ணப்படும். இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 75, பஞ்சாபில் 53, உத்தராகண்டில் 15, மணிப்பூரில் 12 மற்றும் கோவாவில் 2 மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன. மேலும் வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பது, வாக்கு எண்ணும் அதிகாரிகள், கட்சிப் பிரதிநிதிகளை நியமிப்பது மற்றும் வாக்கு எண்ணும் முறை உள்ளிட்டவை குறித்து விரிவான அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

வாக்குப் பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்வது, வாக்கு எண்ணு வது ஆகிய அனைத்து நட வடிக்கைகளையும் வீடியோ படம் எடுக்குமாறும் அறுவுறுத்தப் பட்டுள்ளது.

இந்த ஏற்பாடுகள் அனைத்தை யும் 7-ம் தேதி இரவுக்குள் முடிக்க வேண்டும் என அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in