சென்னை மழைக்கு பருவநிலை மாற்றம் காரணமில்லை: சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருத்து

சென்னை மழைக்கு பருவநிலை மாற்றம் காரணமில்லை: சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருத்து
Updated on
1 min read

சென்னை மழையை பருவநிலை மாற்றத்துடன் தொடர்புபடுத்தக் கூடாது என மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இது இயற்கைப் பேரழிவு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர் களிடம் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:

கடந்த 10 நாட்களாக சென்னையில் நிகழ்ந்திருப்பது மிகத் தீவிர மான சூழல் ஆகும். இதனை பருவ நிலை மாற்றத்துடன் தொடர்பு படுத்தக்கூடாது. இது இயற்கைச் சீற்றம்தான். இதனை மிக சாதுர்யமாகக் கையாள வேண்டும்.

சென்னையில் பெய்த அதீத பருவமழைதான் இச்சூழலுக்குக் காரணம். இதுபோன்ற கால கட்டங்களில் பேரழிவு ஏற்படாதவாறு தடுக்க வேண்டும். இதற்காக மழைநீர் வடிகால்களை சுத்தமாகவும், அடைப்பு இல்லாமலும் வைத்திருக்க வேண்டும். இயல்பான வழித்தடத்தில் நீர் தடையின்றிச் செல்லும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

பாரீஸில் சர்வதேச பருவநிலை மாற்ற மாநாடு நடைபெற்று வரும் சூழலில் சென்னை மழையை பருவ நிலை மாற்றத்துடன் தொடர்பு படுத்துவது இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் வாய்ப்பாகும் என்பதால், அமைச்சர் மேற்கண்டவாறு கூறியிருப்பதாக கருதப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in