

ராணுவத்தில் விரும்பிய இடத் துக்கு பணி மாறுதல் வழங்கு வதற்காக லஞ்சம் பெற்ற அதிகாரி மற்றும் இடைத்தரகரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு விரும்பிய இடத்தில் பணி மாறுதல் பெற்றுத் தருவதற்காக, டெல்லியில் ராணுவ தலைமையகத்தில் ஆள் சேர்ப்பு பிரிவில் பணியாற்றி வரும் லெப்டினென்ட் கர்னல் ரங்கநாதன் சுவரமணி மோனி என்பவரிடம் இடைத்தரகர் கவுரவ் கோஹ்லி ரூ.2 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ராணுவத்தில் உள்ள மூத்த உயரதிகாரிகள் சிலர் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக வந்த புகாரைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடு பட்டு, அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளதாக தெரிவித் துள்ளனர்.
மேலும் டெல்லி ராணுவ தலைமையகத்தில் சட்டவிரோத மான முறையில் பணிமாறுதல் பெற்றுத் தரும் மூத்த அதிகாரி களையும் சிபிஐ கண்டுபிடித்துள் ளது. இதனால் ராணுவ வட்டாரத் தில் இந்த விவகாரம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணுவ மூத்த அதிகாரியான பிரிகேடியர் எஸ்.கே.குரோவர் என்பவரது பெயரும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள் ளது. ஆனால் குற்றவாளிகளின் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக கையும் களவுமாக பிடிக்கப்பட்ட மோனி, இடைத்தரகர் கவுரவ் கோஹ்லி தவிர ஹைதராபாத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி புருஷோத்தம், பெங்களூருவில் பணியாற்றி வரும் ராணுவ அதிகாரி எஸ்.சுபாஷ் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது.
பணி மாறுதலுக்காக ஹவாலா வழியாகவும் லஞ்சப் பணம் பரிமாற்றப்பட்டிருப்பதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விரும்பிய இடத்தில் பணி மாறுதல் பெற வேண்டும் என்ற நோக்கில் பல அதிகாரிகள் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்க தயாராக இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வழக்கில் பெங்களூருவில் பணியாற்றி வந்த சுபாஷும் மற்றொரு அதிகாரியான எஸ்.ஆர்.கே.ரெட்டி என்பவரும் தங்களுக்கு செகந்திராபாத் அல்லது விசாகப்பட்டினத்தில் பணி மாறுதல் பெற்றுத் தரும்படி ஹைதராபாத்தைச் சேர்ந்த அதிகாரி புருஷோத்தம் என்பவரை தொடர்பு கொண்டுள்ளனர். அவர் ராணுவ தலைமையகத்தில் ஆள் சேர்ப்பு பிரிவில் உள்ள மூத்த அதிகாரிகளுடன் நெருக்கமான பழக்கம் வைத்திருந்த இடைத்தரகர் கோஹ்லியை தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் சுபாஷின் பணி மாறுதலுக்காக கோஹ்லி ரூ.5 லட்சம் கேட்டுள்ளார். அந்தப் பணம் ஹவாலா மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டதும். அதில் இருந்து ரூ.2 லட்சத்தை அதிகாரி மோனியிடம் கோஹ்லி வழங்கியபோது பிடிபட்டார்.
சுபாஷின் பணி மாறுதலுக்காக, ராணுவ அதிகாரி மோனியின் வீட்டில் மூத்த அதிகாரிகளை சந்திக்க இடைத்தரகர் கோஹ்லி ஏற்பாடு செய்துள்ளார். அப்போது தான் பிரிகேடியர் எஸ்.கே.குரோ வரை சந்தித்து இருவரும் பணி மாறுதல் விவகாரம் குறித்து அவரிடம் விவாதித்ததாக சிபிஐ யின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.