பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இன்று வேட்புமனு தாக்கல்

பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இன்று வேட்புமனு தாக்கல்
Updated on
1 min read

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த், தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான மக்களவை தலைமைச் செயலாளரிடம் இன்று தாக்கல் செய்கிறார்.

குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவோரின் வேட்பு மனுக்களை மக்கள் பிரதிநிதிகளான எம்.பி., எம்எல்ஏக்கள் தலா 50 பேர் முன்மொழியவும் வழிமொழியவும் வேண்டும். அந்த வகையில் ராம்நாத் கோவிந்தை முன்மொழிவோர், வழி மொழிவோரை பாஜக தலைமை 4 குழுக்களாகப் பிரித்துள்ளது.

முதல் குழுவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 2-வது குழுவில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, 3-வது குழுவில் சிரோமணி அகாலிதளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, 4-வது குழுவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in