பி.ஜே.குரியனுக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

பி.ஜே.குரியனுக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
Updated on
1 min read

சூரியநெல்லி பலாத்கார வழக்கில் மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியனுக்கு உள்ள தொடர்பை விசாரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

இதுகுறித்து பத்திரிகையாளர் டி.பி. நந்தகுமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கு தொடுப்பதற்கு அவருக்குள்ள உரிமை குறித்து கேள்வி எழுப்பியது. “வழக்கு தொடுக்க உங்களுக்கு உரிமையில்லை. பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொட ரட்டும். நாங்கள் விசாரிக்கிறோம் இவ்வழக்கில் தேவையின்றி ஒவ்வொரு வரும் எங்களுக்கு உதவ விரும்பு கின்றனர்” என்று நீதிபதிகள் கூறினர்.

இவ்வழக்கில் குரியனிடம் மீண்டும் விசாரணை நடத்தக் கோரி பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த மனுவை கேரள உயர்நீதிமன்றம் கடந்த அக்டோபர் 31ம் தேதி தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

1996ம் ஆண்டு ஜனவரி மாதம், இடுக்கி மாவட்டம் சூரியநெல்லி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் 40 நாள்களுக்கும் மேலாக பலரால் பலாத்காரம் செய்யப்பட்டார். இவ்வழக்கில் தண்டிக்கப்பட்ட 35 பேரை கேரள உயர்நீதிமன்றம் விடுவித்தது. தரகர் ஒருவருக்கு மட்டும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தது.

இதை எதிர்த்து மாநில அரசு தொடர்ந்த வழக்கை கடந்த ஜனவரி மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது. மேலும் வழக்கை மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in