

நாட்டின் வரி சீர்திருத்த நடவடிக்கை யில் முக்கிய இடத்தைப் பிடிக்க வுள்ள சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) தொடர்பான 4 இணைப்பு மசோதாக்களை மத்திய அரசு நேற்று மக்களவையில் தாக்கல் செய்தது.
ஒரே நாடு, ஒரே வரி திட்டம் என்பதை அமல்படுத்தும் வகை யில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று மத்திய ஜிஎஸ்டி (சி.ஜிஎஸ்டி), ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐ.ஜிஎஸ்டி), யூனியன் பிரதேச ஜிஎஸ்டி (யூ.ஜிஎஸ்டி) மற்றும் இழப்பீடு சட்டம் ஆகிய 4 மசோதாக்களை மக்களவையில் அறிமுகம் செய்தார்.
அப்போது மக்களவையின் அலுவல் பட்டியலில் மசோதா தாக்கல் செய்வது தொடர்பான விவரம் இடம்பெறவில்லை என கூறி எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
அதற்கு பதில் அளித்த நாடாளு மன்ற விவகாரத் துறை இணை யமைச்சர் எஸ்.எஸ்.அலுவாலியா, ‘‘வெள்ளிக்கிழமை நள்ளிரவே அனைத்து மசோதாக்களும் அரசின் இணையதளத்தில் பதி விடப்பட்டது’’ என்றார். இதனால் ஆவேசமடைந்த எதிர்க்கட்சி உறுப் பினர்கள், ‘‘நள்ளிரவு நேரத்தில் எம்.பி.க்கள் அனைவரும் அரசின் இணையதளத்தை நிச்சயம் பார்த் திருப்பார்கள் என்பதை அரசு எப்படி உறுதியாக கூற முடியும்’’ என கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவர் ஓவாய்சி, திரிணமுல் தலைவர் சவுகதா ராய் உள்ளிட்ட தலைவர்களும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்ட முறைக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆட்சேபத்தை புறக்கணித்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ‘‘சனிக்கிழமை காலை யிலேயே மசோதாக்கள் எம்.பி.க் களின் பார்வைக்கு அனுப்பி வைக் கப்பட்டது’’ என்றார். இதனால் மக்களவையில் சலசலப்பு ஏற் பட்டது. இம்மசோதாக்கள் மீது இன்று விவாதம் நடக்கிறது.
ஜிஎஸ்டி மசோதாவை வரும் ஜூலை 1-ம் தேதி நாடு முழு வதும் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.