

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் நேற்று ஆசி பெற்றார்.
டெல்லியில் உள்ள வாஜ்பாயின் வீட்டுக்கு ராம்நாத் கோவிந்தும் அவரது மனைவியும் நேற்று சென்றனர். அங்கு வாஜ்பாய் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் கோவிந்த் ஆசி பெற்றார்.
முன்னதாக பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷியை நேற்று முன்தினம் அவர் நேரில் சந்தித்து ஆசிபெற்றார்.
கோவிந்த் புதிய முகவரி
பிஹார் ஆளுநராக இருந்த போது ராம்நாத் கோவிந்துக்கு டெல்லியில் எண் 144, நார்த் பிளாக்கில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அவர் ஆளுநர் பதவியை ராஜினமா செய்துவிட்டதால் தற்போது எண் 10, அக்பர் சாலை யில் உள்ள பங்களா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பங்களாவில் தற்போது மத்திய கலாச்சார துறை அமைச்சர் மகேஷ் சர்மா வசித்து வருகிறார். இங்கு சுமார் ஒரு மாதம் ராம்நாத் கோவிந்த் தங்கியிருப்பார். பாது காப்பு காரணங்களுக்காக அவருக்கு பெரிய பங்களா ஒதுக் கீடு செய்யப்பட்டிருக்கிறது என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.