

மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் இல்லாத தால், ஜிஎஸ்டி சட்ட மசோதாவை நிறைவேற்ற ஒவ்வொரு உறுப் பினரின் ஆதரவும் அவசியம். எனவே, அனைத்து எம்பிக்களை யும் தனித்தனியாக அணுகி ஆதரவு கோரும் முயற்சியில் பாஜக நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
நியமன எம்பிக்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் நடிகை ரேகா ஆகியோர் காங்கிரஸ் தலைமையிலான ஐமு கூட்டணி ஆட்சியில் மாநிலங்களவைக்கு அழைத்து வரப்பட்டவர்கள். கடந்த 4 ஆண்டுகளில் இவர்கள் நாடாளுமன்றத்தில் பேசியதை விட, அவைக்கு வராததுதான் அதிக செய்தியானது.
இந்நிலையில் ஜிஎஸ்டி மசோதாவுக்கு இவர்கள் இருவரின் ஆதரவையும் பெற வேண்டிய கட்டாயத்தில் பாஜக இருந்தது. சச்சின் அவைக்கு வரவில்லை என்றாலும், ட்விட்டர் மூலம் தனது ஆதரவைத் தந்துவிட்டார்.
ஆனால், ரேகாவை அணுக முடியாமல் பாஜக நிர்வாகிகள் திணறினர். 61 வயதான நடிகை ரேகாவை அணுகி ஆதரவைப் பெறுவது குறித்து, சில மூத்த அமைச்சர்கள் காங்கிரஸின் உதவியை நாடியதாகவும் கூறப்படுகிறது.