தெஹல்கா தேஜ்பால் மீது ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிக்கை

தெஹல்கா தேஜ்பால் மீது ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிக்கை
Updated on
1 min read

தெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதான பலாத்கார வழக்கில் ஒன்று அல்லது ஒன்றரை மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கூறினார்.

இதுகுறித்து அவர் பனாஜியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இவ்வழக்கில் ஒன்று அல்லது ஒன்றரை மாதத்துக்குள் நாங்கள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டும். முதல்கட்ட விசாரணையில் கிடைத்துள்ள ஆதாரங்கள், குற்றச் செயலில் தேஜ்பாலுக்கு தொடர்பு உள்ளதை காட்டுகிறது. விசாரணை முழுவதிலும் அரசியல் தலையீடு இருக்காது. ஏனென்றால் இதில் புகாருக்கான ஆதாரம் தேஜ்பாலிடமே உள்ளது. அவர் தனது இ மெயலில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணை எனக்குத் தெரியாது. இதுவரை அவரது பெயரையும் நான் அறியவில்லை. இவ்வழக்கில் எப்படி ஒருவர் அரசியல் சாயம் பூச முடியும் என்றார் மனோகர் பாரிக்கர்.

தேஜ்பாலுக்கு மீண்டும் பரிசோதனை

தேஜ்பால் நேற்று மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “விசாரணையின் ஒரு பகுதியாக தேவைப்படும் மருத்துவப் பரிசோதனைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன” என்றார் அவர்.

இந்நிலையில் தெஹல்கா முன்னாள் நிர்வாக ஆசிரியர் ஷோமா சௌத்ரி மற்றும் சாட்சிகள் மூவருக்கு, மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்குமூலம் அளிக்க வரும்படி கோவா போலீசார் சம்மன் அனுப்ப உள்ளனர். இந்த சம்மனுக்கு நீதிமன்ற ஒப்புதலை பெறும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மின்விசிறி கிடையாது

இதனிடையே போலீஸ் விசாரணையில் தான் அடைக்கப்பட்டுள்ள லாப் அக் அறைக்கு மின்விசிறி வசதி செய்துதரவேண்டும் என்ற தேஜ்பாலின் கோரிக்கையை மாஜிஸ்திரேட் கிஷாமா ஜோஷி ஏற்க மறுத்துவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in