

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 30 வயது பெண் மருத்துவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்தார்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் பல் மருத்துவராக பணியாற்றி வந்தார் ரிது பங்கோட்டி (30). இவர் டெல்லி மது விஹார் பகுதியில் உள்ள கர்மான்ஞல் அடுக்ககத்தில் கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் வீட்டில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில், "ரிது பங்கோட்டிக்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. ஒரு வயதில் குழந்தை ஒன்று இருக்கிறது.
இந்நிலையில் அவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். அவரது சடலத்தின் அருகே ஊசி ஒன்று கிடந்தது. இதனால் அவர் ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டாரா இல்லை அவரை யாராவது கொலை செய்தார்களா என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரிதுவின் கணவரிடமும் விசாரணை நடைபெறுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.