

ஆந்திரப் பிரதேசத்தை இரண்டாகப் பிரித்ததற்கு எதிராக, மாநில முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி உள்ளிட்ட 12 பேர் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
ஆந்திரப்பிரதேச மறுசீரமைப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடாது என கடந்த பிப்ரவரி 7, 17 ஆகிய தேதிகளில் பலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
ஆனால் மாநிலப் பிரிவினை குறித்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எந்தவித முடிவும் எடுக்காதபோது, இதுபோன்ற மனுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. ஒருவேளை மசோதா மீது தீர்மானம் நிறைவேற்றினால், நீதிமன்றத்தை நாடலாம் எனவும் கருத்து தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து நாடாளு மன்றத்தில் ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு மசோதா நிறைவேற் றப்பட்டது.
இந்நிலையில் ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மாநிலப் பிரிவினையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் எம்.பி.க்கள் சப்பம் ஹரி, அருண் குமார், சாம்பசிவ ராவ் உட்பட சீமாந்திராவைச் சேர்ந்த 12 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.