தெலங்கானா விவகாரம்: ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு

தெலங்கானா விவகாரம்: ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு
Updated on
1 min read

ஆந்திரப் பிரதேசம் மறுசீரமைப்பு மசோதாவை சுமூகமாக நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்களை களைவதற்காக ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி மற்றும் சீமாந்திரா பகுதி எம்.பி.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியை எடுத்துள்ளது காங்கிரஸ்.

இதற்காக, கிரண்குமார் ரெட்டி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்களை டெல்லி வருமாறு கட்சி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றம் நாளை கூடவிருக்கும் நிலையில், இன்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெலங்கானா எம்.பி.க்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

மசோதா நிறைவேறுமா?

தெலங்கானா தனி மாநிலத்தை உருவாக்குவது தொடர்பான மசோதாவை எளிதாக நிறைவேற்ற முடியாது என்று கூறப்படுகிறது. சீமாந்திரா எம்.பி.க்கள் கூச்சல், குழப்பத்தில் ஈடுபடுவார்கள்.

அவர்களை மத்திய அரசு எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. தெலங்கானா மசோதாவை எதிர்க்கப் போவதாக சமாஜ்வாதி கட்சியும் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in