

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று திருமலை திருப்பதிக்கு குடும்பத்துடன் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
பின்னர் கோயிலுக்கு வெளியே நிருபர்களிடம் அவர் கூறியதாவது: திருப்பதியில் உள்ள 165 ஏரிகள் தூர்வாரப்படும். திருமலை, ஸ்ரீகாளஹஸ்தி, கானிப்பாக்கம் மற்றும் கடப்பா ஒண்டி மிட்டா ஸ்ரீராமர் கோயில்களுக்கு பக்தர்கள் எளிதாக சென்று வர ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் நியமனம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘கோயிலுக்குள் அரசியலை நுழைய விடமாட்டேன்’’ என்றார்.