

சமாஜ்வாதி காங்கிரஸ் கூட்டணி 2019 மக்களவை தேர்தலிலும் தொடரும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறினார்.
இதுகுறித்து அவர் கான்பூரில் பிடிஐ செய்தியாளரிடம் நேற்று கூறியதாவது:
உ.பி.யில் மதச்சார்பின்மை ஆதரவு தளத்தை வலுப்படுத்த வேண்டுமானால் சமாஜ்வாதியும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து செயல்படுவது அவசியம் என் பதை இரு கட்சிகளும் உணர்ந் துள்ளோம். எனவே 2019 மக்க ளவை தேர்தலிலும் சமாஜ்வாதி காங்கிரஸ் கூட்டணி தொடரும்.
உ.பி.யில் 2014 மக்களவை தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள் பிரிந்து நின்றதால்தான் பாஜக 73 இடங்களை பெற முடிந்தது. வரும் 2019 மக்களவை தேர்தலில் இங்கு காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய லோக் தளம் ஆகிய கட்சிகள் ஒன்றுசேர்ந்து போட்டியிட்டால் பாஜக 10 - 15 இடங்களையே பெறமுடியும்.
பிரதமர் பதவிக்குரிய முதிர்ச்சியும் மனப்பக்குவமும் மோடிக்கு வரவில்லை. இதை நான் நாடாளுமன்றத்திலேயே அவரிடம் கூறிவிட்டேன். பிரதமர் பதவிக்குரிய மாண்பை காக்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டேன்” என்றார்.