

மகளிர் இட ஒதுக்கீடு மசோ தாவை விரைவாக நிறை வேற்ற வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தப் போவதாக திமுக எம்.பி. கனிமொழி அறிவித்துள்ளார்.
திமுக மகளிர் அணி சார்பில் இப்போராட்டம் நாளை நடத்தப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. இது குறித்து நேற்று அவர் கூறும்போது, ‘‘நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கடந்த 20 ஆண்டுகளாக அமலுக்கு வரவில்லை. இந்த மசோதாவை விரைவாக நிறைவேற்ற வலியுறுத்தி போராட் டம் நடத்தப் போகிறோம். இதில் திமுகவின் மகளிர் அணியி னரும், சில பெண் உரிமை அமைப்புகளும் பங்கேற்கின்ற னர். மேலும் ஒரு சில அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளும் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொள்ளவுள்ளனர். மோடி அரசு நிச்சயம் இம்மசோதாவை நிறைவேற்றியே தீர வேண்டும்’’ என்றார்.
மேலும் டெல்லியில் கடந்த சில நாட்களாக தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டினார். முன்னதாக இம்மசோதாவை நிறைவேற்றும் விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என வலியுறுத்தி திமுக செயல் தலை வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.