மேற்கு வங்கத்தில் கூட்டாக பலாத்காரம்: 13 பேருக்கு நீதிமன்ற காவல்

மேற்கு வங்கத்தில் கூட்டாக பலாத்காரம்: 13 பேருக்கு நீதிமன்ற காவல்

Published on

மேற்கு வங்கத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 20 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இவர்கள் அனைவரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு பிர்பும் மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

லாப்பூர் பகுதியை சேர்ந்த 20 வயது பெண், வேறொரு மதத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரை காதலித்தார். இது தொடர்பாக அந்த பெண்ணின் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் விசாரணை நடத்தினர். கட்டப் பஞ்சாயத்தின் இறுதியில், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யும்படி அந்த சமூகத்தின் தலைவர் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து அந்த கிராமத்தைச் சேர்ந்த 13 பேர், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in