

பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டும் எந்த ஒரு தலைவரும் அரசியலில் நீடித்ததில்லை என சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது. மேலும், அண்டைமாநிலமான பாகிஸ்தானின் மண் சபிக்கப்பட்டது எனவும் விமர்சித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 25-ம் தேதியன்று திடீர் பயணமாக பாகிஸ்தான் சென்று அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், சிவசேனாவின் சாம்னா பத்திரிகையின் தலையங்கத்தில், "பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டும் எந்த ஒரு தலைவரும் அரசியலில் நீடித்ததில்லை என சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது. மேலும், அண்டைமாநிலமான பாகிஸ்தானின் மண் சபிக்கப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கட்டுரையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டும் எந்த ஒரு தலைவரும் அரசியலில் நீடித்ததில்லை. எல்.கே.அத்வானி, வாஜ்பேயி போன்ற தலைவர்கள் பாகிஸ்தானிடம் நெருக்கம் காட்டினர். ஆனால், அவர்கள் தீவிர அரசியலில் நீடிக்க முடியவில்லை. அத்வானி ஒருமுறை முகமது அலி ஜின்னா நினைவிடத்துக்குச் சென்றுவிட்டு அவரை புகழ்ந்து பேசினார். அதன்பின்னர் அவரது அரசியல் வாழ்க்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது. இப்போது அவர் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் மண் சபிக்கப்பட்டது. லட்சக்கணக்கான அப்பாவி இந்தியர்களை பாகிஸ்தான் கொன்று குவித்துள்ளது. எனவே அந்நாட்டு மண் சபிக்கப்பட்ட மண். அத்தகைய நாட்டுக்கு முன் அறிவிப்பின்றி பிரதமர் சென்று வந்திருக்கிறார். இதுபோலவே காங்கிரஸ் பிரதமர் ஒருவர் இவ்வாறாக செய்திருந்தால் பாஜகவின் எதிர்வினை என்னவாக இருந்திருக்கிரும் என நாடே கேள்வி எழுப்புகிறது. அப்பாவி இந்தியர்களின் ரத்தம் தோய்ந்த மண்ணில் கால் பதித்ததற்கு பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
இவ்வாறு அத்தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.