சத்தீஸ்கர் மாநில வனப் பகுதியில் மாவோயிஸ்ட் தாக்குதலில் 25 சிஆர்பிஎப் வீரர்கள் பலி

சத்தீஸ்கர் மாநில வனப் பகுதியில் மாவோயிஸ்ட் தாக்குதலில் 25 சிஆர்பிஎப் வீரர்கள் பலி
Updated on
2 min read

10-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்களும் கொல்லப்பட்டதாக தகவல்

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோ யிஸ்ட்கள் நேற்று தாக்குதல் நடத்தி யதில் 25 சிஆர்பிஎப் வீரர்கள் பலியா யினர். படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். பதில் தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்களும் கொல்லப்பட்டதாகக் கூறப்படு கிறது.

மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த பஸ்தார் மண்டலத்துக்குட்பட்ட சுக்மா மாவட்டம், சின்டகுபா அருகே உள்ள கலாபதர் வனப் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டுள் ளவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், சிஆர்பிஎப் 74-வது படைப் பிரிவைச் சேர்ந்த 99 வீரர்கள் அங்கு முகாமிட்டிருந்தனர்.

இந்நிலையில் வனப் பகுதியில் மறைந்திருந்த மாவோயிஸ்ட் கும்பல் நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் சிஆர்பிஎப் வீரர்களை நோக்கி கண்மூடித்தன மாக துப்பாக்கியால் சுட்டும் கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். பின்னர் மாவோ யிஸ்ட்கள் வீரர்களின் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு வனப் பகுதிக்குள் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சுக்மா மாவட்டத் துக்கு அருகில் உள்ள முகாம்களில் இருந்த சிஆர்பிஎப் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து சிஆர்பிஎப் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த மோதலில் பலியான 25 வீரர்களின் சடலங்கள் மீட்கப் பட்டுள்ளன. மேலும் படுகாயமடைந்த 6 பேர் ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு ராய்ப்பூர் மற்றும் ஜகதல்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில வீரர்களை காணவில்லை. தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது” என்றார்.

கருப்பு சீருடை அணிந்திருந்த சுமார் 300 மாவோயிஸ்ட்கள் இந்த கொடூர தாக்குதலை நடத்தியதாக, உயிர் தப்பிய வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார். வீரர்களின் பதில் தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றிருந்த மாநில முதல்வர் ரமண் சிங், இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் தனது பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு ராய்பூர் திரும்பினார். பின்னர் உயரதிகாரிகளுடன் அவர் அவசர ஆலோசனை நடத்தினார்.

சுக்மா மாவட்டத்தில் கடந்த மார்ச் 11-ம் தேதி மாவோயிஸ்ட் நிகழ்த்திய தாக்குதலில் 12 வீரர்கள் பலியாயினர். இதுபோல் 2010-ல் சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடா பகுதியில் மாவோ யிஸ்ட்கள் நிகழ்த்திய தாக்குதலில் 76 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி இரங்கல்

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “மாவோயிஸ்ட் தாக்குதலில் பலியான சிஆர்பிஎப் வீரர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களது தியாகம் வீண் போகாது. இந்தத் தாக்குதல் கோழைத்தனமானது. நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது” என பதிவிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “சத்தீஸ்கர் மாநிலத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது வேதனை அளிக் கிறது. நிலைமையை ஆராய்வதற்காக இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் அங்கு விரைந்துள்ளார்” என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in