தொழிலதிபர்களின் நலனுக்கு பாடுபடும் மோடி அரசு: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தாக்கு

தொழிலதிபர்களின் நலனுக்கு பாடுபடும் மோடி அரசு: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தாக்கு
Updated on
1 min read

நரேந்திர மோடி அரசு தொழிலதிபர்களின் நலனுக்காக மட்டுமே பாடுபடுவதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

தனது மக்களவைத் தொகுதி யான அமேதிக்கு 2 நாள் பயண மாக சென்றுள்ள ராகுல் காந்தி புரே லடாய் கிராமத்தில் மக்களை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நாட்டின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அதற்காக பாடுபடும் கட்சி காங்கிரஸ். அந்த கட்சியை வலுப்பெறச் செய்திடல் வேண்டும்.

தொழிலதிபர்களின் நலனை மட்டுமே முக்கியத்துவமாக கருதி பாடுபட்டு வருகிறது மோடி அரசு. நிலம் கையகப்படுத்துதல் மசோதா மூலமாக விவசாயிகளின் நிலங்களைக் கைப்பற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முழு மூச்சாய் உள்ளது. ஆனால் இந்த முயற்சியை காங்கிரஸ் எதிர்த்துப் போராடி வருகிறது.

உத்தரப் பிரதேசத்திலோ அல்லது மத்தியிலோ ஆட்சியில் இல்லாததால் மக்களின் விருப்பங் கள், எதிர்பார்ப்புகளை காங்கிரஸ் கட்சியால் நிறைவேற்ற இயலாமல் உள்ளது.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் கடமை மக்களான உங்கள் கையில் உள்ளது. நாட்டின் எதிர்காலம் காங்கிரஸ் கையில் உள்ளது. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முடிந்தபிறகு தனது தொகுதியில் மக்கள் சந்திக்க வந் துள்ளார் ராகுல்காந்தி. கூட்டத் தொடரில் வியாபம் ஊழல், லலித் மோடி சர்ச்சை, நிலம் கையகப் படுத்துதல் மசோதா உள்ளிட்ட பிரச்சினைகளை கையில் எடுத்து நாடாளுமன்றத்தை காங்கிரஸ் முடக்கியது.

லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் விமான நிலையத்துக்கு நேற்று வந்ததும் நேராக தனது தொகுதிக்கு புறப்பட்ட ராகுல், வழியில் மக்களைச் சந்தித்து மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகள் பற்றி பேசினார்.

அமேதிக்குச் செல்லும் வழியில் ஆங்காங்கே நிறுத்தி மக்களைச் சந்தித்து பேசினார். தகின் என்ற கிராமத்துக்கும் அவர் சென்றார்.

நாடாளுமன்றத்தை முடக்கிய தாக காங்கிரஸ் கட்சியை குறைகூறி 44 மக்களவைத் தொகுதிகளுக்கு சென்று மக்களிடம் எடுத்துச் சொல்லும்படி தமது தலைவர் களை பாஜக அனுப்ப திட்ட மிட்டுள்ளது. அதை முறியடிக்க ராகுல் தனது தரப்பிலும் தயாராக உள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in