

இந்திய ராணுவத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பிய விவகாரத் தில் ஆம்னஸ்டி அமைப்புக்கு தடைவிதிக்கக் கோரி பெங்களூ ருவில் நேற்று முற்றுகை போராட்டம் நடத்திய ஏபிவிபி அமைப்பினர் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா அமைப்பு சார்பாக கடந்த 13-ம் தேதி பெங்களூருவில் காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக நடைபெற்ற கருத்தரங்கில் இந்திய ராணுவத்துக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதைக் கண்டித்து பாஜக, பஜ்ரங் தளம், ஏபிவிபி ஆகிய அமைப்பினர் போராட்டத்தில் குதித்ததால், ஆம்னஸ்டி அமைப் பினர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் அந்த அமைப்புக்கு தடைவிதிக்கக் கோரி ஏபிவிபி, விஹெச்பி, ஆர்எஸ்எஸ் ஆகிய அமைப்பினர் கர்நாடகாவில் பெங்களூரு, ஹூப்ளி, கொப்பள் உள்ளிட்ட இடங்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின் றனர். இதனால் இந்தியாவில் ஆம்னஸ்டி அலுவலகம் மூடப் பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று பெங்களூரு இந்திராநகரில் உள்ள ஆம்னஸ்டி அமைப்பின் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஏபிவிபி, ஆர்எஸ்எஸ் அமைப் பினர் போராட்டம் நடத்தினர். ஆம்னஸ்டி இந்தியா அமைப்புக்கு தடைவிதிக்கக் கோரியும், இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும் முழக்கம் எழுப்பினர்.
மேலும் ஆம்னஸ்டி அலுவல கத்துக்குள் நுழைய ஏபிவிபி அமைப்பினர் முயன்றனர். இத னால் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்த போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற் பட்டது. அப்போது போராட்டக் காரர்களில் சிலர் ஆம்னஸ்டி அலுவலகத்தின் மீது கற்களையும், சோடா பாட்டில்களையும் வீசினார். இதையடுத்து போராட்டக்காரர் கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் போராட்டக்காரர்கள் 20 பேருக்கு காயம் ஏற்பட்டது.
பெட்ரோல் குண்டு
இது தொடர்பாக பெங்களூரு மாநகர கூடுதல் காவல் ஆணையர் ஹரிசேகரன் கூறும் போது,
“கற்களையும், சோடா பாட்டீல்களையும் கொண்டு போராட்டக்காரர்கள் அலுவல கத்தைத் தாக்க முயற்சித்ததால் தடி யடி நடத்த வேண்டிய நிலை ஏற் பட்டது. கல்வீச்சில் 4 போலீ ஸாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சிலர் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட் டில்களை கொண்டு வந்துள்ளனர். எனவே 40 பேரைப் பிடித்து விசாரித்து வருகிறோம்''என்றார்.
ஏபிவிபி அமைப்பினர் மீது போலீஸார் தடியடி நடத்தியதற்கு பாஜக மாநில தலைவர் எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.