

சட்டீஸ்கரில் கொலை வழக்கில் சந்தேகிக்கப்பட்டு வந்த மாவோயிஸ்ட்டுகள் இருவரை போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் சுட்டு கொன்றனர்.
சட்டீஸ்கரில் துளசிதோங்கிரி பகுதியில் நேற்று (திங்கட் கிழமை) இரவு போலீஸார் நடத்திய சிறப்பு தேடுதல் வேட்டையில் மாவோயிஸ்ட்டுகள் இருவரை சுட்டு கொன்றதாக சட்டீஸ்கர் மாநிலத்தின் தலைமை போலீஸ் அதிகாரி கால்லூரி தெரிவித்தார்.
மேலும் “சுடப்பட்ட இருவரும் மாவோயிஸ்ட்டுகளின் ஆடைகளை அணிதிருந்தனர். அவர்கள் சுடப்பட்ட இடத்திலிருந்து கைதுப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சுடப்பட்டவர்களில் ஒருவர் மாவோயிஸ்ட் அமைப்பின் கமண்டோ. மற்றொருவரின் அடையாளம் இன்னும் கண்டுப்பிடிக்கபடவில்லை”. என்று கூறினார்.
போலீஸருக்கு மாவோயிஸ்ட்டுகள் பற்றி துப்பு கொடுத்து வந்த நவின் தாஸ் பாகெல் என்பவரை மாவோயிஸ்ட்டுகள் கொலை செய்து கங்களுர் சாலையில் வீசினர்.
அதனை ஒட்டி போலீஸார் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் இவ்விரு மாவோயிஸ்ட்களும் கொல்லப்பட்டுள்ளனர்