மணிப்பூர் வந்த ஜப்பான் பெண்ணுக்கு எபோலா இருப்பதாக சந்தேகம்

மணிப்பூர் வந்த ஜப்பான் பெண்ணுக்கு எபோலா இருப்பதாக சந்தேகம்
Updated on
1 min read

மியான்மரிலிருந்து மணிப்பூர் வந்த சுற்றுலா பயணிக்கு எபோலா பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கப்பட்டதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மணிப்பூருக்கு சுற்றுலாவுக்காக வந்த க்வாகுபோ யுகோ(27) என்ற ஜப்பான் நாட்டு பெண்ணுக்கு எபோலா நோய்க்கான அறிகுறிகள் தெண்பட்ட நிலையில் அவர், இம்பாலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளார். இதுவரை 5 நாடுகளுக்கு சென்ற அவர் இறுதியாக, மியான்மர் சென்று அங்கிருந்து சாலை மார்க்கத்தில் மணிப்பூர் வந்தடைந்தார்.

உடல் சோர்வு உள்ளிட்ட சில பிரச்சினைகளால் மருத்துவரை அணுகியபோது எபோலா பாதிப்பு இருக்க கூடிய அறிகுறிகள் அவரிடம் காணப்பட்டது. இருப்பினும் பரிசோதனைக்கு பிறகே இது குறித்து தெரிவிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேகத்துக்கு உரிய பெண் வசித்திருந்த விடுதியில் தங்கி இருந்த மற்றவர்களும் கண்காணிக்கப்படுவதாகவும், யுகோவுக்கு எபோலா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அந்த விடுதியில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் ஜவஹர்லால் நேரு மருத்துவ கல்லூரி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in