டெல்லி போலீஸாருக்கு ‘வாட்ஸ் அப்’பில் புகார் தரலாம்

டெல்லி போலீஸாருக்கு ‘வாட்ஸ் அப்’பில் புகார் தரலாம்
Updated on
1 min read

சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றுடன் மொபைல் போன்கள் மூலம் ‘வாட்ஸ் அப்’பிலும் புகார் அளிக்கும் வசதியை டெல்லியின் போக்குவரத்து போலீஸார் நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தினர்.

இது பற்றி ‘தி இந்து’ செய்தியாளரிடம் டெல்லி போக்குவரத்து சிறப்பு போலீஸ் கமிஷனர் முகேஷ் சந்தர் கூறும்போது, ‘நகரில் அனுமதி பெறாத இடங்களில் சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்துதல், வாகன நிறுத்துமிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தல், போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டுதல், ஆட்டோ மற்றும் வாடகைக் கார் ஓட்டுநர்கள் பயணிகளிடம் தகராறு செய்தல் போன்றவற்றை பார்க்கும் பொதுமக்கள் தாங்களாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும்.

இதற்காக, சமூக வலைதளங்கள் மட்டுமின்றி ‘வாட்ஸ் அப்’ மூலமும் புகார் அளிக்கும் வசதியை இப்போது ஏற்படுத்தியுள்ளோம். இந்த வசதியை பயன்படுத்தி முதல் நாளன்றே 500-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. ‘வாட்ஸ் அப்’ மூலம் புகார் அளிப்பதால், நாங்கள் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வசதியாக உள்ளது. புகார் அனுப்பும்போது, அது தொடர்பான வீடியோ அல்லது புகைப்படங்ளையும் அனுப்பினால் நல்லது. இந்த புகாரை 8750871493 என்ற எண்ணுக்கு அனுப்பலாம்.” என்றார்.

டெல்லியில் 9910641064 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘வாட்ஸ் அப்’ மூலம் புகார்களைத் தெரிவிக்க லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஏற்கெனவே நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in