

பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள் கொண்ட ரூ.1 கோடி பணத்துடன் 3 பேரை குஜராத் போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள மாந்தவி சாலையில் நேற்று முன்தினம் இரவு போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூவரிடமிருந்து இத்தொகையை போலீஸார் கைப்பற்றினர்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது, “இந்தப் பணத்துக்கு உரிய ஆவணங்களை காட்டத் தவறியதால் மூவரையும் பிடித்து வைத்துள்ளோம். வருமான வரித் துறைக்கு தகவல் தெரிவித் துள்ளோம். தீபக் நந்தா, திரிலோக் தவே, சுலேமான் பட்டி என இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூவரிமும் விசாரணை மேற்கொண் டுள்ளோம்” என்றார்.