

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 29வது நினைவு தினத்தை ஒட்டி டெல்லியில் இன்று அவரது நினைவிடத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
தவிர மத்திய அமைச்சர்கள் சுஷில்குமார் ஷிண்டே, கமல்நாத், ஆஸ்கார் பெர்னாண்டஸ், வீரப்ப மொய்லி, கிருஷ்ணா தீரத் ஆகியோரும் இந்திரா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இந்திரா காந்தி, கடந்த 1984-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி அவரது மெய்காப்பாளட்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.