Published : 30 Oct 2014 11:41 AM
Last Updated : 30 Oct 2014 11:41 AM

ஐ லவ் ஹுத் ஹுத் என சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த இருவர் கைது

கடலோர ஆந்திராவை புரட்டிப் போட்ட ‘ஹுத் ஹுத்’ புயல் தொடர்பாக மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த இருவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

‘ஹுத் ஹுத்’ புயல் கடந்த 12-ம் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது. இதனால் கடலோர ஆந்திரா, ஒடிஸா ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தில் 50 பேர் உயிரிழந்தனர். பல கோடி மதிப்புள்ள பயிர்கள், பொருட்கள் நாசமடைந்தன. பலர் காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில் குண்டூரை சேர்ந்த சட்டப்படிப்பு படிக்கும் மாணவர் ஒருவர், சமூக வலைதளத்தில் ‘ஐ லவ் ஹுத் ஹுத்’ என்ற தலைப்பில் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மனம் புண்படும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதே போன்று ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவரும் மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் தனது சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இவர்கள் இருவரும் சைபர் கிரைம் சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x