

மகாராஷ்டிர அரசு அலுவல கங்களில் பண்டிகை கொண்டாட விதிக்கப்பட்ட தடை, கடும் எதிர்ப் பால் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், பல்வேறு துறைகள், கல்வி நிறு வனங்களில் மதரீதியான எந்தப் பண்டிகையும் கொண்டாடக் கூடாது. அங்கு வைக்கப்பட்டுள்ள கடவுள் படங்களை அகற்ற வேண்டும் என்று சமீபத்தில் எல்லா துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப் பப்பட்டது. இதற்கு மகாராஷ்டிரா வில் பாஜக.வுடன் கூட்டணி வைத் துள்ள சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
அத்துடன் அரசு ஊழியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து அரசு ஊழியர்கள் கூறும்போது, ‘‘ அரசு ஊழியர்கள் அலுவலகங்களில் தினமும் 10 முதல் 12 மணி நேரம் செல விடுகின்றனர். பண்டிகைகளை, விழாக்களை அவர்களால் வீடு களில் இருந்து கொண்டாட முடி யாத நிலை உள்ளது. இந்நிலை யில், அலுவலகங்களில் கொண் டாடப்படுவதால் அதை ஈடு செய் கின்றனர். அத்துடன் வெளியூர் களில் இருந்து மாற்றலாகி வேலை செய்பவர்கள், குடும்பத்தைப் பிரிந்து தனியாக வசித்து அரசு அலுவகங்களில் வேலை செய் வோருக்கு இதுபோன்ற பண்டிகை கள், மதரீதியான கொண்டாட்டங்கள் ஆறுதலைத் தருகின்றன. எனவே, தடையை நீக்க வேண்டும்’’ என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அரசை கேட்டுக் கொண்டார். ‘‘அரசு அலுவலகங் களில் மதரீதியான கொண்டாட்டங் களுக்கு தடை விதிப்பது குறித்து கூட்டணி கட்சியான எங்களிடம் ஆலோசனை நடத்தவில்லை. அமைச்சரவையில் இதுகுறித்து விவாதிக்கவும் இல்லை. எதிர்க்கட்சியினரிடம் ஆலோசனை நடத்தவும் இல்லை. இந்த தடையை வாபஸ் பெறாவிட்டால் பெரும் போராட்டம் நடத்தப்படும்’’ என்று உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து சிவசேனா அமைச்சர்கள் நேற்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து நிலைமையை எடுத்துரைத்தனர். அப்போது அவர்களிடம் பேசிய பட்னாவிஸ், ‘‘அரசு அலுவல கங்களில் மதரீதியான கொண் டாட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க அரசு முடிவு செய்துள்ளது’’ என்று தெரிவித்தார்.
முதல்வர் பட்னாவிஸை சந்தித்தப் பின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராம்தாஸ் கதம் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இந்த உத்தரவு தவறுதலாகப் பிறப்பிக்கப் பட்டுள்ளது.
எனவே, தடை வாபஸ் பெறப் பட்டு விட்டது. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தில் இருந்து தடை தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது சரியான நட வடிக்கை எடுக்க முதல்வர் உத்தர விட்டுள்ளார்’’ என்றார்.