மாநிலங்களவைத் தேர்தல் நேரத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏ கைது: பாஜக சூழ்ச்சி என காங்கிரஸ் புகார்

மாநிலங்களவைத் தேர்தல் நேரத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏ கைது: பாஜக சூழ்ச்சி என காங்கிரஸ் புகார்
Updated on
1 min read

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாநிலங் களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும் சமயத்தில், 3 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு தொடர்பாக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏ சாம்ரா லிண்டாவை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 2 உறுப்பினர்களை தேர்ந்தெடுப் பதற்கான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. பாஜக சார்பில் முதல் வேட்பாளரான முக்தர் அப்பாஸ் நக்விக்கு எம்எல்ஏ.க்கள் ஆதரவு இருந்ததால் வெற்றி எளிதானது.

ஆனால், 2-வது உறுப்பினர் பதவிக்கு குறைவான ஆதரவு இருந்தும் பாஜக வேட்பாளரை நிறுத்தியது. பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரனின் இளைய மகன் பசந்த் சோரன் அக்கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

வெற்றிபெற 28 எம்எல்ஏக்கள் போதும் என்ற நிலையில், 30 எம்எல்ஏக்கள் பசந்த் சோரனுக்கு ஆதரவாக வாக்களிக்க இருந்தனர். இந்நிலையில், 2013-ம் ஆண்டு சட்டப்பேரவை வாயிலில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை தொடர்பான வழக்கில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏ சாம்ரா லிண் டாவை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர்.

லிண்டாவுடன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்மலா தேவி மற்றும் தேவேந்திரசிங் ஆகிய 2 எம்எல்ஏக்களுக்கு எதிராக வும் கைது வாரண்ட் பிறப்பிக் கப்பட்டது. பாஜகவுக்கு எதிராக வாக்கு அளிப்பதை குறைக்கும் நோக்கில் ஆளும் பாஜக அரசு இந்நடவடிக்கையில் ஈடுபட்டதாக தேர்தல் ஆணையத்திடம் காங் கிரஸ் தரப்பில் புகார் அளிக்கப் பட்டது. மேலும், வாக்களிக்க விடாமல் எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டால் நீதிமன்றத்தை நாடவும் காங்கிரஸ் தயாராக இருந்தது. இதற்கிடையே, மாநிலங் களவைத் தேர்தலில் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் வாக்களித்து விட்டதால் அம்முயற்சியை காங்கிரஸ் கைவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in