Published : 23 Feb 2014 10:11 PM
Last Updated : 23 Feb 2014 10:11 PM

சோனியாவுடன் டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர ராவ் திடீர் சந்திப்பு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் சந்திரசேகர ராவ் கூறியதாவது: சோனியா காந்தியுடன் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. தெலங்கானா தனி மாநிலம் அமைய ஆதரவு அளித்ததற்கு அவருக்கு நன்றி தெரிவித்தேன்.

ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் திக்விஜய் சிங்குடன் தொடர்பில் இருக்குமாறு சோனியா காந்தி கேட்டுக் கொண்டார் என்று அவர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் சத்திய நாராயணா கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் நிருபர்களிடம் பேசிய போது, தெலங்கானா மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளதால் தெலங்கானா ராஷ்டிர சமிதி இனிமேல் தனி அமைப்பாக செயல்பட வேண்டிய அவசியமில்லை என்றார்.

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வியிடம் நிருபர்கள் கேட்டபோது, காங்கிரஸின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று தெரிவித்தார்.

ஆரம்பத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த சந்திரசேகர ராவ் அதிலிருந்து பிரிந்து தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைத் தொடங்கி தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி போராடினார்.

2004 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸும் தெலங்கானா ராஷ்டிர சமிதியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றது. ஆனால் 2009 தேர்தலில் தெலுங்கு தேசத்துடன் தெலங்கானா ராஷ்டிர சமிதி கைகோத்தது. அந்தத் தேர்தலில் 2 மக்களவைத் தொகுதிகள், 10 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே ராஷ்டிர சமிதி வெற்றி பெற்றது.

இணைப்பா? கூட்டணியா?

இப்போது புதிய மாநிலமாக உதய மாகியுள்ள தெலங்கானாவில் 17 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்ற கட்சிகளிடையே இப்போதே கடும் போட்டி நிலவு கிறது.

தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகியவை தெலங்கானாவை பகிரங்கமாக எதிர்த்த தால் அந்தக் கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட் டுள்ளது.

எனவே காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலையில் தெலங்கானா ராஷ்டிர சமிதி காங்கிரஸில் இணையுமா அல்லது கூட்டணி அமைத்துப் போட்டியிடுமா என்பதை அறிய அனைத்து தரப்பினரும் ஆவலாக உள்ளனர். இப்போதைய நிலை யில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x