

‘‘அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களுக்கும் இணையதள வசதி கொண்டு வரப்படும்’’ என்று மக்களவையில் அமைச்சர் பி.பி.சவுத்ரி தெரி வித்தார்.
நாட்டில் கிராமங்களுக்கு இணையதள வசதியை மேம்படுத் துவது தொடர்பாக மக்களவையில் நேற்று உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா எழுத்துப்பூர்வ மாக பதில் அளித்தார். மக்கள வைக்கு நேற்று சின்ஹா வராததால், அவரது சார்பில் அமைச்சர் பி.பி.சவுத்ரி எழுத்துப்பூர்வமான பதிலை வாசித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
‘பாரத்நெட்’ திட்டத்தின்படி முதல் கட்டமாக இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு இணையதள சேவை வழங்கப்படும். இரண்டாம் கட்டமாக அடுத்த ஆண்டு இறுதிக்குள் மீதமுள்ள 1.5 கிராம பஞ்சாயத்துகள் உட்பட நாட்டில் உள்ள 2.5 லட்சம் கிராமங்களுக்கும் இணையதள சேவை வழங்கப்பட்டு விடும். இணையதள வசதியால், ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை அதிகரிக்கும்.
இணையதள சேவை வசதி இல்லாததால், ‘இ நிர்வாகம்’ ‘டிஜிட்டல் இந்தியா’ போன்ற திட்டங்களை முழுமையாக அமல் படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.
இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவே, நாடு முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கு இணையதள சேவை மும்முரமாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஜனவரி 29-ம் தேதி நில வரப்படி 76,089 கிராம பஞ்சாயத்து களுக்கு இணையதள சேவை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு சின்ஹா கூறியுள்ளார்.