Published : 27 Jun 2016 07:59 AM
Last Updated : 27 Jun 2016 07:59 AM

2011-2012-ம் ஆண்டில் எமர்ஜென்சியை கொண்டுவர சோனியா காந்தி திட்டம் போட்டார்: சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு புகார்

‘‘கடந்த 2011 - 2012-ம் ஆண்டில் நாட்டில் மீண்டும் எமர்ஜென்சியை கொண்டுவர காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திட்டம் போட்டார்’’ என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி புகார் கூறியுள்ளார்.

கடந்த 1971-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, நாட்டில் அவசர நிலையை (எமர்ஜென்சி) கொண்டு வந்தார். அதன் 41-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருவனந்தபுரத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நாட்டில் இந்துத்துவா தீவிரவாத குழு செயல்படுவதாக வதந்தி யைப் பரப்பி, கடந்த 2011-2012-ம் ஆண்டில் எமர்ஜென்சியை கொண்டுவர சோனியா திட்டமிட் டார். ஆனால், அப்போதைய ராணுவ தளபதி வி.கே.சிங் அவரு டைய திட்டத்துக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டார். அதனால் சோனியா வின் திட்டம் பலிக்கவில்லை.

சரயு நதியின் மறுபக்கம் பாபர் மசூதி கட்டுவதற்கு முஸ்லிம் களுக்கு இடம் ஒதுக்கவேண்டும். அதேபோல், ‘கிருஷ்ணா பேக்கேஜ்’ என்ற திட்டத்தை முஸ்லிம்கள் ஏற்கவேண்டும். அதன்படி, அயோத்தியா, காசி, மதுராவில் இந்துக்கள் மீண்டும் கோயில் கட்டவேண்டும்.

முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் நூற்றுக்கணக்கான கோயில்கள் சிதைக்கப்பட்டன. அதை ஈடுகட்டுவதற்காக இந்த 3 இடங்களிலும் கோயில் கட்டு வதற்கு முஸ்லிம்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். மகாபாரதத் தில் பாண்டவர்களுக்கு 5 கிராமங்களையாவது கொடுங்கள் என்று கவுரவர்களிடம் கிருஷ்ணர் வேண்டினார். அதுபோல், குறைந்த பட்சம் 3 இடங்களிலாவது கோயில் கள் கட்டுவதற்கு இந்துக்களுக்கு அனுமதி தரவேண்டும் என்று முஸ்லிம்களை நான் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு சுப்பிர மணியன் சுவாமி கூறினார்.

அவர் மேலும் கூறும்போது, ‘‘ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம் பரமும் அவரது குடும்ப உறுப் பினர்களும் விரைவில் சிறை செல்வார்கள். திஹார் சிறையில் விரைவில் கட்சி செயற்குழுக் கூட்டத்தை காங்கிரஸ் கூட்டும். மேலும், காங்கிரஸ் எம்.பி. சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் இயற்கையானது அல்ல. சுனந்தாவை யார் கொன்றது என்பது சசிதரூருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். இதுகுறித்து டெல்லி போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விரைவில் உண்மை வெளிவரும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x