

பாலியல் பலாத்காரத்தில் ஈடு படுவோரை, சட்டம் அனுமதித் தால் சுட்டுத்தள்ள அல்லது தூக்கிலிடவும் தயாராக இருக் கிறோம் என்று டெல்லி காவல் துறை ஆணையர் பி.எஸ்.பாஸ்ஸி கூறினார்.
கடந்த 2015-ம் ஆண்டில் டெல்லி காவல்துறையின் சாதனைகள் குறித்து பாஸ்ஸி நேற்று செய்தி யாளர்களிடம் பேசினார். அப் போது அவர் கூறியதாவது:
டெல்லி காவல்துறைக்கு 2015-ம் ஆண்டு திருப்தி அளிக்கும் ஆண்டாக உள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாடு மூலம் காலவிரயம் தவிர்க்கப்பட்டு எங் களின் ஆற்றலை பிற முக்கிய பணிகளில் செலவிட முடிந்தது. பெண்களின் பாதுகாப்பு எங் களுக்கு எப்போதும் கவலை அளிக்கிறது.
சட்டம் அனுமதித்தால் பலாத் காரத்தில் ஈடுபடுவோரை சுட்டுத் தள்ள, அல்லது தூக்கிலிடவும் தயாராக இருக்கிறோம். ஆனால் சட்டம் அவ்வாறு அனுமதி அளிக்கவில்லை. திருட்டு வழக்கு களில் 90 சதவீதம் தீர்வு காணப் படாமல் உள்ளது.
போலீஸாரில் சிலர் உண் மையை மறைப்பதே இதற்கு காரணம். ஆனால் இனி எந்த போலீஸ் காவலரும் பொய் சொல்லமாட்டார் என்பதை நான் உறுதிப்படுத்தியுள்ளேன்.
மத்திய அரசின் கட்டுப் பாட்டில் இருப்பது டெல்லி காவல்துறையின் அதிர்ஷ்டம். டெல்லி காவல்துறைக்கு நெருக்குதல்கள் ஏதுமில்லை என்பதால் டெல்லி மக்கள் 100 சதவீதம் அதிர்ஷ்டசாலிகள். பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் தரப்பில் எங்களுக்கு குறுக்கீடுகள் ஏதுமில்லை. மத்திய அரசை திருப்திபடுத்தும் வகையில் நாங்கள் செயல் படுவதாக டெல்லி முதல்வர் வீண்பழி சுமத்துகிறார்.
இவ்வாறு பாஸ்ஸி கூறினார்.
டெல்லியில் பஸ்ஸில் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதில் சம்பந்தப் பட்ட ஒரு குற்றவாளி சிறார் சட்டப் படி 3 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலையானார். இந்நிலையில் பாலியல் குற்றவாளியை சட்டம் அனுமதித்தால் சுட்டுத்தள்ள வேண்டும் என்று பாஸ்ஸி கருத்து கூறியுள்ளார்.