Published : 03 Jun 2017 09:36 AM
Last Updated : 03 Jun 2017 09:36 AM

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்

கேரளா, லட்சத் தீவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது.

கோழிக்கோட்டின் வடகரையில் நேற்று அதிகபட்சமாக 8 செ.மீ. மழையும், லட்சத்தீவின் மினிகாய், கேரளாவின் ஆழப்புழா பகுதிகளில் தலா 7 செ.மீ. மழையும் பெய்தது.

அகாட்டி (லட்சத்தீவு), கொல்லம் தலா 6 செ.மீ., கொச்சி பெரும்பாவூர், காஞ்சிரபள்ளி, பீர்மேடு, கொன்னி, வர்கலாவில் தலா 5 செ.மீ. மழை பெய்தது.

கேரளா, லட்சத்தீவில் வரும் 4-ம் தேதி வரை தொடர்ந்து கனமழை பெய்யும். மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x