

மத்திய அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான வரைவு கொள்கையை மத்திய அரசு பணியாளர் மற்றும் பயிற்சித் துறை தயார் செய்துள்ளது.
அதன்படி ஆசிட் வீச்சில் பாதிக் கப்பட்டவர்கள், ஆட்டிசம், மனநல பாதிப்பு, அறிவுத் திறன் குறைபாடு உடையோருக்கு மத்திய அரசு பணிகளில் ஒரு சதவீத இடஒதுக் கீடு வழங்க புதிய வரைவு கொள்கையில் பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.இந்த வரைவு கொள்கை தொடர்பாக 15 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்து களைத் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.