

சென்னை எண்ணூர் கடலில் பரவிய எண்ணெய் படலத்தால் குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மீன்கள், ஆமைகள், நண்டுகள் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 28-ம் தேதி அன்று சென்னை அருகே உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தில் இருந்து வெளியே வந்த இரு கப்பல்கள் எண்ணூரில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் கப்பலில் இருந்த எண் ணெய் கடலில் சிந்தியதில் எண் ணூர் கடல் பகுதி முழுவதும் கரு நிறமாக மாறியது.
இந்நிலையில் மாநிலங்களவை யில் நேற்று இப்பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
எண்ணூரில் பரவிய எண்ணெய் படலத்தால் கடலில் பெட்ரோலியம் ஹைட்ரோகார்பன் அதிகரித்திருக்கிறது. எண்ணெய் சிந்திய பகுதியில் இருந்த தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன. சிப்பிகள் அனைத்தும் எண்ணெய்யில் தோய்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நண்டுகள், மீன்கள், ஆமைகள் அதிகமாக பாதிப்படைந்தன. இதை யடுத்து முழு வங்காள விரிகுடா கடல் பகுதியிலும் கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற் கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. தற்போது எண்ணெய் படலம் நீக்கப்பட்டிருப்பதால் கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழப்பது தடுக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையோரங்களில் மீண்டும் நண்டுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.