

காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவும் தீவிரவாதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டது. ராணுவ தாக்குதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக ராணுவ உயரதிகாரி ஒருவர் கூறும்போது, "காஷ்மீர் மாநிலம் நவ்காம் மாவட்டத்தில் இன்று (திங்கள்கிழமை) காலை எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி வழியாக தீவிரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றனர்.
அப்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். நவ்காம் பகுதியில் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.
கடந்த 6 நாட்களில் நவ்காம் பகுதியில் 3 ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளது. 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளுடனான சண்டையில் ராணுவத்தினர் இருவர் வீரமரணமடைந்துள்ளனர்" என்றார்.