

காஷ்மீரின் மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் தாரிக் கர்ரா, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஸ்ரீநகரில் நேற்று செய்தியாளர் களை சந்தித்த தாரிக், எம்பி பதவியை ராஜினாமா செய்வதாகவும், கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். 'பாஜகவோடு, மக்கள் ஜனநாயகக் கட்சி ஐக்கியமானதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை' என அவர் கூறினார்.