Published : 26 Jan 2017 09:20 AM
Last Updated : 26 Jan 2017 09:20 AM

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல்: சமாஜ்வாதியுடன் கூட்டணி வைப்பதற்கு பின்னணியாக இருந்த பிரியங்கா காந்தி

உத்தரப் பிரதேசத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணியை ஏற்படுத் திய பின்னணியில் பிரியங்கா காந்தி இருந்தது தெரிய வந்துள்ளது.

உத்தரப் பிரதேச சட்டப்பேர வைத் தேர்தல் பிப்ரவரி 11-ம் தேதி தொடங்கி மார்ச் 8-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது. மொத்தம் உள்ள 403 தொகுதி களில், ஆளும் சமாஜ்வாதி 298 இடங்களிலும், காங்கிரஸ் 105 இடங்களிலும் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன.

இந்நிலையில், சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணி ஏற்படவும், தொகுதி பங்கீடு சுமூகமாக முடியவும் பிரியங்கா காந்தி முக்கிய பங்காற்றி உள்ளார்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அரசியல் நடவடிக் கைகளை அவரது சகோதரி பிரியங்கா பின்னால் இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார் என்று காங்கிரஸார் அடிக்கடி கூறி வந்த னர். மேலும், உத்தரப் பிரதேசத்தில் ராகுல் மற்றும் சோனியாவின் சொந்த தொகுதிகளான அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி விவ காரங்களிலும் பிரியங்காவின் பங்கு இருப்பதாக காங்கிரஸார் கூறினர்.

இந்நிலையில், சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணி ஏற்பட பிரியங்காவின் பங்கு முக்கிய மானது என்று சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் நேற்று ட்விட்டரில் பகிரங்கமாக தெரிவித்தார்.

இதுகுறித்து ட்விட்டரில் அகமது படேல் நேற்று கூறும்போது, ‘‘சமாஜ்வாதி கட்சியுடன் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் யாரும் பேச்சு நடத்தவில்லை என்று கூறுவது தவறு. உ.பி. முதல்வர் அகிலேஷுடன் உ.பி. காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத்தும், பிரியங்கா காந்தியும் நேரடியாக ஆலோசனை நடத்தி னர்’’ என்று தெரிவித்தார். ஆனால், சமாஜ்வாதி கூட்டணி அமைய ராகுல் முக்கிய பங்காற்றியதாக அகமது படேல் கூறவில்லை.

அதன்பின், சமாஜ்வாதி கூட்டணி நல்லவிதமாக அமைய பிரியங்கா முக்கிய பங்காற்றினார். அவருக்கு நன்றி என்று ஆசாத்தும் தெரிவித்தார்.

அரசியல் விவகாரங்களில் பிரியங்கா நேரடியாக தலையிட் டுள்ளார் என்று தகவல் வருவது இதுவே முதல் முறை. எனவே, காங்கிரஸில் பிரியங்காவின் செல் வாக்கு அதிகரித்து வருவதைக் காட்டும் சிக்னலாகவே இதை காங்கிரஸார் கருதுகின்றனர். அதற்கேற்ப உ.பி. விவகாரங்கள் குறித்த கட்சி ஆலோசனை கூட்டங்களிலும், சில நேரங்களில் தனது வீட்டில் மூத்த தலைவர்களை சந்தித்தும் பிரியங்கா ஆலோசனை நடத்தி உள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளு மன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அதன்பின் கட்சிக்கு மோடி அரசு விடுத்து வரும் சவால்களை சமாளிக்க பிரியங்கா காந்தி முழு வீச்சில் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் அரசியல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தற்போது உ.பி., பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸுக்கு ஆதரவாக திட்டங்கள் வகுத்து கொடுத்து வருகிறார். அவரும் பிரியங்கா அரசியலில் தீவிரமாக இறங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

உ.பி.யின் அமேதி, ரேபரேலி யில் மட்டுமன்றி, சோனியா காந்தி பெல்லாரியில் போட்டியிட்ட போதும் பிரியங்கா தீவிர பிரச்சாரம் செய்தார்.

உ.பி. தேர்தல் பிரச்சாரம் குறித்து கடந்த ஆண்டு ஜூலை மாதமே காங்கிரஸ் கட்சி தீவிர ஆலோசனை நடத்தியது. அப் போது பிரியங்காவை பிரச்சாரத் தில் களம் இறங்க யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால், பிரச் சாரத்துக்குப் பதில் முதலில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தும் பொறுப்பை பிரியங்காவிடம் வழங்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. அதன்படியே தற்போது சமாஜ் வாதி கட்சியிடம் 105 இடங்களை காங்கிரஸ் பெற பிரியங்கா முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

தற்போது முதல்வர் அகிலேஷ் மற்றும் சிறிய கட்சித் தலைவர்களுடன் ராகுலுடன் சேர்ந்து பிரியங்காவும் அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார் என்பது பகிரங்கமாக தெரிய வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x