எல்லையில் 25 கிலோ ஹெராயின் பறிமுதல்

எல்லையில் 25 கிலோ ஹெராயின் பறிமுதல்

Published on

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய பாகிஸ்தான் எல்லையில் கடத்த முயன்ற 25 கிலோ ஹெராயின் மற்றும் ஆயுதங்களை எல்லை பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எப்) பறிமுதல் செய்தனர்.

நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள், எல்லைச் சாவடி அருகே சந்தேகத்துக்குரிய சிலர் நடமாடி யதைக் கண்டனர். அங்கு விரைந்து சென்ற அவர்கள், அங்கிருந்த 25 கிலோ ஹெராயின் மற்றும் தானியங்கி துப்பாக்கி உள்ளிட்ட சில ஆயுதங்களைக் கைப்பற்றினர். மேலும் பாகிஸ்தான் சிம்கார்டு பொருத்தப்பட்ட செல்போனும் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் யாரும் கைது செய்யப்பட வில்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in