Last Updated : 11 Apr, 2017 07:04 AM

 

Published : 11 Apr 2017 07:04 AM
Last Updated : 11 Apr 2017 07:04 AM

மோட்டார் வாகன மசோதா நிறைவேறியது

போக்குவரத்து துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை உறுதி செய்யும் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது.

முன்னதாக, இந்த மசோதா மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: போக்குவரத்து துறையில் ஊழலை ஒழிப்பதற்கு இந்த மசோதாவில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி போலி ஓட்டுநர் உரிமம் தயாரிக்க முடியாது. மின்னணு நிர்வாக முறை கொண்டுவரப்படுவதால் வாகனத் திருட்டு இனி இருக்காது. ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் நாடு முழுவதும் ஒரேவிதமாக விதிமுறைகள் இருக்கும். மின்னணு நிர்வாக முறை காரணமாக மின்னணு வாகனப் பதிவு வசதியும் கிடைக்கும். போக்கு வரத்து விதிகளை மீறுவோருக்கு கடும் அபராதம், சாலை விபத் தில் கிக்கியவர்களை காப்பாற்று பவர்களுக்கு பாதுகாப்பு, சாலை விபத்துகளுக்கு வாகன வடி வமைப்பு காரணமாக இருந்தால், வாகன உற்பத்தியாளர்களை விபத் துகளுக்கு பொறுப்பாக்குவது என பல்வேறு அம்சங்கள் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன. இதனால் மனித உயிர்கள் காப்பற்றப்படும்.

நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் விபத்துகள் நடக்கின்றன. இதில் சுமார் 1.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். எனவே மனித உயிர்களை காப்பதே இந்த மசோதாவின் அடிப் படை நோக்கமாகும். எங்களின் ஐந்தாண்டு கால ஆட்சி முடியும் போது, சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கையை பாதியாக குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம்.

சட்டத் திருத்தம் அமலுக்கு வரும்போது, அரசியல்வாதிகள் போன்ற விஐபி.க்கள் உட்பட யாரும் சோதனையில் பங்கேற்காமல் ஓட்டுநர் உரிமம் பெற முடியாது. அமைச்சராக இருந்தாலும் என்னால்கூட வீட்டில் இருந்து ஒட்டுநர் உரிமம் பெற முடியாது.

ஒருவர் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பழகுநர் உரிமம் பெற முடியும். 3 நாட்களில் ஆர்டிஓ (சாலைப் போக்குவரத்து அதிகாரி) ஓட்டுநர் உரிமம் வழங்காவிடில், அவர் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகைக்கு உச்ச வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்த மசோதாவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் திருத்தங்கள் கொண்டுவந்தனர். ஆனால் அவை நிராகரிக்கப்பட்டு, இறுதியில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x