Last Updated : 05 Aug, 2016 10:38 AM

 

Published : 05 Aug 2016 10:38 AM
Last Updated : 05 Aug 2016 10:38 AM

உயர் நீதிமன்ற நீதிபதி நியமனங்களில் இட ஒதுக்கீடு முறை இல்லை: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

உயர் நீதிமன்ற பணியிடங்களில் இடஒதுக்கீடு முறையை அமல் படுத்தும் திட்டம் அரசுக்கு இல்லை என மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நேற்று இதுதொடர்பாக அவர் கூறிய தாவது:

உயர் நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு முறை கொண்டு வரும்படி பல்வேறு தரப்பிலிருந்தும் ஆலோசனைகள் வருகின்றன. சட்டத்திருத்தம் கொண்டு வரும் படியும் கோரப்படுகிறது. எனினும் உயர் நீதிமன்றங்களில் இடஒதுக் கீடு முறையைப் பின்பற்றவது தொடர்பான திட்டம் அரசிடம் தற் போது இல்லை. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனம் அரசியல் சாசன சட்டப்பிரிவு 124 மற்றும் 217-ன் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. இவற்றில் இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யப்படவில்லை.

எனினும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளிடம், நீதிபதி நியமன பரிந்துரைகளை அனுப்பும் போது சரியான நபர்களை பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், சிறுபான்மையினர், மகளிர் ஆகிய பிரிவுகளிலிருந்து பரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய நீதித்துறை நியமன ஆணைய சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதனை மீண்டும் முன்னெடுக்க அரசு முயற்சி செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x