மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்க புதிய கொள்கை :அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்க புதிய கொள்கை :அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
Updated on
1 min read

மாவோயிஸ்ட் தாக்குதல் திட்டங் களை முறியடித்து, வீரர்கள் பலி யாவதை குறைப்பது தொடர்பாக விவாதிக்க உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று உயர் நிலை கூட்டம் நடந்தது.

சத்தீஸ்கரில் சுக்மா மாவட்டம், சின்டகுபா அருகே உள்ள கலாபதர் வனப் பகுதியில் சாலை அமைக்கும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் மீது மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 25 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். பதிலுக்கு வீரர்கள் நடத்திய தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட மாவோ யிஸ்ட்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் வீரர்களின் உயிரிழப்புகளைத் தடுப்பது குறித்து, டெல்லியில் நேற்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் உயர் நிலை கூட்டம் நடந்தது.

இதில் உளவு தொடர்புகளை வலுப்படுத்துவது, பிரச்சினைக் குரிய பகுதிகளை அடையாளம் காண்பது உள்பட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

கூட்டத்தில் பங்கேற்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை செயலர் ராஜீவ் மெஹ்ரிஷி இருவரும் நக்சல் எதிர்ப்பு கொள்கையை மறுமதிப்பீடு செய்வதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

சுக்மாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக, மாவோயிஸ்ட்கள் உள்ளூர் பழங்குடியினர் வீடுகளில் தங்கியிருந்தனர். இதனைப் பாதுகாப்பு படையினர் கண்டுபிடிக்கவில்லை. எனவே உளவு நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

பின்னர் மாவோயிஸ்ட்களை ஒடுக்குவது தொடர்பான புதிய கொள்கையை வரையறுத்து வரும் மே 8-ம் தேதி நடக்கவுள்ள கூட்டத்தின்போது தாக்கல் செய்யும்படி அதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார். அந்த கூட்டத்தில் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் நிறைந்த 35 மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

நவீன ரேடார் வாங்க திட்டம்

வனப்பகுதியில் மறைந் திருக்கும் மாவோயிஸ்ட்களை கண்டுபிடிக்க, அதிநவீன ரேடார் கருவியை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ரேடார் புதர்கள் மற்றும் இலைகளையும் ஊடுருவி, ஆள் நடமாட்டம் இருப்பதைப் பாதுகாப்புப் படை யினருக்கு காட்டிக் கொடுத்து விடும். மேலும் அதன் படங்களை யும் எடுத்து அனுப்பும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in