Published : 20 Nov 2014 12:51 PM
Last Updated : 20 Nov 2014 12:51 PM

சாமியாரும் ஆயுதங்களும்!

போலீஸில் சரணடைவது என்ற எளிய, புத்திசாலித்தனமான முடிவை எடுப்பதற்குப் பதிலாக சாமியார் ராம்பால் அவரது ஆதரவாளர்களின் உயிரை பணயம் வைத்திருக்கிறார்.

ஒரு சில சாமியார்களும், மதத் தலைவர்களும் தங்களுக்கு சமூகத்தில் இருக்கும் அந்தஸ்தை மிகை மதிப்பீடு செய்து வைத்திருக்கின்றனர். தன்னை பின் தொடரும் பக்தர்களை எதைச் சொல்லி வெறியர்களாக்கி வைத்திருக்கிறார்களோ அதையே அவர்களும் நம்பத் தொடங்கிவிடுகின்றனர். கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க சாமியார் எடுத்த முயற்சிகள் இதற்குச் சான்று.

தனது ஆதரவாளர்களை பயன்படுத்தி தன்னை தற்காத்துக் கொள்ள சாமியார் ராம்பால் ஆடிய நாடங்கள் தேசத்தின் சட்டத்தை எவ்வளவு எளிதாக அவர் எடுத்துக்கொண்டார் என்பதை உணர்த்துவகிறது. தன்னை தற்காத்துக் கொள்ள முடியும் என சாமியார் வைத்திருந்த சுய நம்பிக்கையை அருவருப்புடனேயே பார்க்க முடிகிறது.

நீதிமன்ற அவமதிப்புக்காக கைது ஆணை இருந்தும்கூட போலீஸார் ஆசிரமத்திற்குள் அவ்வளவு எளிதாக நுழைய முடியவில்லை. ஆசிரமத்திலிருந்த ஆதரவாளர்கனுடன் தேவையற்ற தள்ளுமுள்ளு ஏற்படுவதைத் தவிர்க்க போலீஸார் காத்திருப்பு நாடகத்தை நடத்தினர். ராம்பால் ஆதரவாளர்களை அடக்குவதற்கு அவர்கள் முயற்சிக்கவில்லை. ஆனால், ராம்பால் ஆதரவாளர்கள் சும்மா இருக்கவில்லை. போலீஸார் ஆயத்தமாக வைத்திருந்த தண்ணீர் பீரங்கிகள், கண்ணீர் புகைகுண்டு இயந்திரங்கள் மீது ஆசிட் பாக்கெட்டுகள், துப்பாக்கித் தோட்டாக்கள் என சரமாரியாக தாக்குதலை துவக்கினர்.

இதையெல்லாம், சாமியார் ராம்பால் சிலாகித்து வந்தார் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், அவரது கணிப்பு வேறாக இருந்தது. எவ்வளவு நாட்கள் தனது ஆதரவாளர்கள் போலீஸுடனான போராட்டத்தை தாக்குப் பிடிக்கிறார்கள் அவ்வளவு தூரம் தனது பிம்பம் சமூகத்தில் பிரபலமடையும் என்பதே அவரது கணிப்பு. அவருடைய யதார்த்த அந்தஸ்தைவிட பல மடங்கு கூடுதல் அந்தஸ்தை கூட்டிக்கொள்ளவே இத்துனை போராட்டமும்.

அதன் காரணமாகவே, போலீஸில் சரணடைவது என்ற எளிய, புத்திசாலித்தனமான முடிவை எடுப்பதற்குப் பதிலாக சாமியார் ராம்பால் அவரது ஆதரவாளர்களின் உயிரை பணையம் வைத்திருக்கிறார்.

இந்த களேபரத்தில் ஒரு குழந்தையும், 5 பெண்களும் பலியாகியுள்ளது வேதனைக்குரியது. சாவுக்கான காரணம் இன்னும் உறுதிப்படத்தப்படாத நிலையில், ஆதரவாளர்களை மனித கேடயமாக பயன்படுத்தி தப்பித்துக் கொள்ளும் சாமியாரின் முயற்சி அவருக்கு எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

சர்ச்சைகள் எத்தனை சூழ்ந்தாலும், அவற்றின் மீதே நம்பிக்கையை மேலும் கண்மூடித்தனமாக கட்டும் அவரது ஆதரவாளர்களை, சாமியார் மீது தேசத்துக்கு எதிராக போர் தொடுத்ததாக பதியப்பட்டுள்ள வழக்கு, தடுத்து நிறுத்தாது.

ராம்பால் புகழின் உச்சிக்கு வந்த விதத்தை மறந்துவிட முடியாது. அவர் மற்ற சாமியார்கள் போல் அல்ல. புனிதர் கபீரின் மறு பிறவியே நான் என சொல்லிக்கொண்ட ராம்பால் தன் போதனைகளால் பெரும் கூட்டம் சேர்த்தார். பின்நாளில், பிரபலங்கள், அரசியல்வாதிகள், பெரும்புள்ளிகளை சிலரை குறிவைத்து தாக்கிப் பேசிய பிரபலமடைந்தார். சட்டத்தின் மீதும் சக்தி வாய்ந்தவர்கள் மீதும் அவர் காட்டிய வெறுப்பே அவருக்கு ஆதரவாளர்களை பெற்றுத்தந்தது.

- தி இந்து (ஆங்கிலம்) தலையங்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x