

தெலங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பான முடிவைத் திரும்பப் பெறும் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் தெரிவித்தார்.
இதுகுறித்து இந்தூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்தொற்றுமையின் அடிப்படையிலேயே தெலங்கானா முடிவு எடுக்கப்பட்டது. அப்போது, தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் தெலங்கானா தனி மாநிலத்துக்கு ஆதரவு தெரிவித்தன. அந்தக் கட்சிகள் இப்போது திடீரென முடிவை மாற்றிக் கொண்டுள்ளன.
தெலங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை கடந்த வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கிவிட்டது. அந்த முடிவில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை” என்று அவர் தெரிவித்தார்.