Last Updated : 24 Apr, 2017 02:57 PM

 

Published : 24 Apr 2017 02:57 PM
Last Updated : 24 Apr 2017 02:57 PM

பறவை மோதியதால் சித்தராமையாவின் ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்

கர்நாடக முதல்வர் சித்தராமையா பயணித்த ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதால், விமானம் கிளம்பிய சிறிது நேரத்திலேயே தரையிறக்கம் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் இன்று (திங்கட்கிழமை) ஹெச்ஏஎல் பெங்களூரு விமான நிலையத்தில் நடந்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய காவல்துறை துணை ஆணையர் நாகேஷ குமார், ''கர்நாடக முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா மற்றும் 3 பேர் ஹெலிகாப்டரில் பயணித்துள்ளனர்.

ஹஸ்ஸன் மாவட்டத்தில் உள்ள சரவணபெலகுலாவுக்குச் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர். நிலைமை சீரானதும், சில நிமிட இடைவெளிக்குப் பிறகு, அதே ஹெலிகாப்டரில் அனைவரும் கிளம்பிச் சென்றனர்.

பறவை மோதியதற்குப் பிறகு, ஹெலிகாப்டருக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை'' என்று தெரிவித்தார்.

சரவணபெலகுலாவில் உள்ள ஜெயின் யாத்திரை மையத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் 'மகாமஸ்தகாபிஷேகா' விழாவுக்கான வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள, சித்தராமையா அங்கு செல்லவிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x