

முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம், மத்திய எரிசக்தி துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் மகாராஷ்டிராவிலிருந்து மாநிலங் களவைக்கு போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் 6 இடங் களுக்கு 6 பேர் மட்டுமே போட்டி யிட்டனர். வேட்புமனுவை திரும்பப் பெற நேற்று கடைசி நாள். வேறு யாரும் போட்டியிடாததால், 6 பேர் மாநிலங்களவைக்கு தேர்ந் தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப் பட்டது.
சிதம்பரம், கோயல் தவிர, முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் படேல் (தேசியவாத காங்கிரஸ்), பாஜகவின் வினய் சகஸ்ரபுத்தே, விகாஸ் மகாத்மே, சஞ்சய் ராவத் (சிவசேனா) ஆகியோரும் மாநிலங் களவைக்குத் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
இதனிடையே, மகாராஷ்டிர மேலவைக்கு முன்னாள் முதல்வர் நாராயண் ராணே உட்பட 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த னர். இவர்களில் 2 பேர் மனுவைத் திரும்பப் பெற்றதால் 8 பேர் போட்டியின்றி தேர்வாயினர்.
நாராயண் ராணே தவிர, சுஜித் சிங் தாகுர், பிரவீண் தரேகர், ஆர்.என். சிங் (அனைவரும் பாஜக), மேலவை எதிர்க்கட்சித் தலைவர் தனஞ்ஜெய் முண்டே உட்பட மேலவை தேர்தலில் 9 பேர் வெற்றி பெற்றனர்